பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் திரும்பினார் ஓவியா?

  • IndiaGlitz, [Saturday,August 05 2017]

பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறியதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன அழுத்தம் காரணமாக, நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.

ஓவியாவுக்கு பல உளவியல் மற்றும் மனநல ஆலோசகர்கள் கவுன்சிலிங் வழங்கியதாகவும் அதுமட்டுமின்றி ஓவியாவுக்கு நெருக்கமான உறவினர்களும் அவரிடம் பேசியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வதை ஓவியா விரும்பவில்லை என்றும், கமல்ஹாசனுடன் மட்டும் இந்த நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஓவியா வெளியேறிவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருதிய சேனல் மீண்டும் ஓவியாவிடம் நிகழ்ச்சியில் தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சேனலின் வேண்டுகோளை ஏற்று அவர் பிக்பாஸ் வீட்டுக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த சந்தேகங்கள் இன்றைய நிகழ்ச்சியில் தீரும் என்று நம்பப்படுகிறது.

More News

ரஜினி அரசியலுக்கு வருவது சரியா? ஷாருக்கான் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பலர் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர்...

இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனை சந்திக்கிறாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தத்தால் வெளியேற்றப்பட்ட ஓவியாவுக்கு தற்போது மனநல மருத்துவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் கவுன்சிலிங் கொடுத்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஓவியா, உனக்கு ஆரவ் சரியான ஆள் கிடையாது: ஒரு தாயின் மனக்குமுறல்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்வையாளர்களை கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, நேற்று ஓவியா வெளியேறியவுடன் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது...

சன்னிலியோன் ஆணுறை விளம்பரம். சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய எம்.எல்.ஏ

சன்னிலியோன் நடித்த ஆபாசமான ஆணுறை விளம்பரம் குறித்து கோவா சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஓவியா வெளியேற்றம்: திரையுலக பிரபலங்களின் கருத்து

பொதுவாக எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு திடீரென அதீத புகழ் கிடைத்தால் பொறாமைப்படும் குணம் இருக்கும். அதற்கு திரையுலகமும் விதிவிலக்கல்ல. ஆனால் ஓவியா விஷயத்தில் அவருக்கு கிடைத்த திடீர் புகழால் யாருக்கும் பொறாமை ஏற்படவில்லை...