பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் திரும்பினார் ஓவியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறியதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன அழுத்தம் காரணமாக, நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.
ஓவியாவுக்கு பல உளவியல் மற்றும் மனநல ஆலோசகர்கள் கவுன்சிலிங் வழங்கியதாகவும் அதுமட்டுமின்றி ஓவியாவுக்கு நெருக்கமான உறவினர்களும் அவரிடம் பேசியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வதை ஓவியா விரும்பவில்லை என்றும், கமல்ஹாசனுடன் மட்டும் இந்த நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஓவியா வெளியேறிவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருதிய சேனல் மீண்டும் ஓவியாவிடம் நிகழ்ச்சியில் தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சேனலின் வேண்டுகோளை ஏற்று அவர் பிக்பாஸ் வீட்டுக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த சந்தேகங்கள் இன்றைய நிகழ்ச்சியில் தீரும் என்று நம்பப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com