கமல்ஹாசனையும் 'கவனிக்க' தொடங்கிய ஓவியா ஆர்மியினர்
- IndiaGlitz, [Friday,August 04 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது பங்கேற்பாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவரும் காயத்ரியின் 'சீர்' பிர்ச்சனையை சரியாக கையாண்டதாலும், ஜுலிக்கு குறும்படம் ஒன்றை போட்டி அதிர்ச்சி அடைய வைத்ததாலும் கமல் நிச்சயம் இந்த நிகழ்ச்சியை நடுநிலையாக தொகுத்து வழங்குவார் என்றே அனைவரும் நம்பினர்.
ஆனால் இதெல்லாம் முதல் நான்கு வாரங்கள்தான். ஓவியாவை காயத்ரி கோஷ்டி டார்ச்சர் கொடுப்பதை கமல் கண்டு கொள்ளாமல் இருந்தது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் காயத்ரி சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தை கூறியதை கண்டிக்காமல் விட்டது, அகராதியில் பொய் என்ற வார்த்தைக்கு பதிலாக ஜூலி என்ற வார்த்தையை இனி பயன்படுத்தலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக பொய் கூறி வரும் ஜூலி, கடந்த வாரம் இனிமேல் பொய்யே சொல்ல மாட்டேன் என்று கூறியவுடன் அவருக்கு ஆதரவு வழங்கியது ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது கமல் தன் நடுநிலையில் தடுமாறுகிறாரா? என்று ஓவியா ஆர்மியினர் கடுப்பாகி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடு காரணமாக கமல்ஹாசனின் டுவிட்டர் பக்கத்திலேயே அவரை கலாய்க்கும் வகையில் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் ஓவியாவின் புரட்சி படையினர். இன்று கமல்ஹாசன் சிவாஜி கணேசன் சிலை குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் கமெண்டில் ஓவியா ஆர்மியினர் தங்களுடைய குறும்பு வேலையை காட்டி வருகின்றனர்.
குறிப்பாக “ஆண்டவரே எல்லாரும் காயத்ரி உங்க ஆளுங்கன்னு தான் நீங்க கண்டிக்க மாட்டேங்கறீங்கன்னு சொல்றாங்க, உண்மையா?”, “நம்ம ஏன் ஓவியாவுக்கு ஒரு சிலை வைக்கக் கூடாது ஆண்டவரே”, “ஆண்டவரே, ஓவியாவுக்கு போட்டியா பிந்து மாதவிய அனுப்பினது, ஆடி காரோட ரேஸ் விட ஆட்டோவ அனுப்பினது மாதிரி”, “ஓவியாவ அங்க டார்ச்சர் பண்ணிட்டு இருக்கானுக ஆண்டவரே”, “ஆண்டவரே இந்த வாரம் ஜூலி வெளிய போகலனா... போறது விஜய் டிவி மேல உள்ள நம்பிக்கை மட்டும் இல்ல. உங்க மேல உள்ள நம்பிக்கையும் தான்” போன்ற கமெண்டுக்களை நிச்சயம் கமல் படித்திருப்பார் என்றே நம்பப்படுகிறது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான்கான் யார் பக்கமும் சாயாமல் பல அதிரடி முடிவுகளை எடுத்ததால்தான் அந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பிரபலமாகியது. எனவே ஆளும் அமைச்சர்களுகே பயப்படாத கமல்ஹாசன், சல்மான்கான் போன்று இனிவரும் வாரங்களில் தனது நடுநிலையை தவறாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று நம்புவோம்.