'ஐட்டம்' என்று கூறிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஓவியா

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

நடிகை ஓவியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் பல கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் ஓவியாவிடம் 'தன்னை திருமணம் செய்து கொள்ள தயாரா? என்று கேள்வி கேட்க அதற்கு இன்னொரு ரசிகர் 'ஐட்டத்தை கல்யாணம் செய்து என்ன பண்ணப்போற' என்று கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகருக்கு பதிலளித்த ஓவியா, 'ஐட்டம் உங்கம்மா' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஓவியாவின் இந்த பதிலடிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓவியா குறித்து சர்ச்சையாக பதிவு செய்த அந்த ரசிகருக்கு ஓவியாவின் ரசிகர்களும் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் தளமே பரபரப்பில் உள்ளது