ஓவியாவுடன் சிம்பு! காதலர் தினத்தில் ஆச்சரிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

90ml' என்ற டைட்டிலில் உருவாகும் படத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிதா உதீப் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'குளிர் 100' என்ற படத்தை கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்கின்றார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அதில் ஓவியா ஒரு கையில் பன் மற்றும் இன்னொரு கையில் டீ வைத்து போஸ் கொடுத்துள்ளார். காதலர் தினத்தில் ஓவியா மற்றும் சிம்பு இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் அறிவிப்பு இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

More News

திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1

திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்...

குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு

மலையாள நடிகை பிரியாவாரியாரின் ஒரே ஒரு கண்ணசைவும், புருவ நடனமும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது

அஜித்தின் 'விசுவாசம்' இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு

இந்த சிவராத்திரி எனக்கு ஒரு மேஜிக் அனுபவம்: தமன்னா

நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி கொண்டாடப்பட்டது தெரிந்ததே. அந்த வகையில் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில்

வறுமையில் வாடும் பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் செய்த உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கைப்பற்றியதில் இருந்து பல நலிவுற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்து வருவதை பார்த்து வருகிறோம்.