ஆரவ்வுடன் மீண்டும் காதலா? வைரலாகும் ஓவியா புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வேண்டுமானால் ஆரவ் இருக்கலாம், ஆனால் இன்றும் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவின் அந்த கள்ளங்கபடம் இல்லாத சிரித்த முகம் தான்.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் ஆரவ்வை ஓவியா காதலித்ததும், ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்ததும் தெரிந்ததே. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் யாரையும் காதலிக்கவில்லை, தான் ஒரு சிங்கிள் என்று ஓவியா பதிவு செய்த ஒரே ஒரு டுவீட் ஒருசில நாட்களாக டிரெண்டில் இருந்தது. இதனால் ஓவியா-ஆரவ் காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் ஆரவ்வுடன் நெருக்கமாக ஓவியா இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பழைய புகைப்படமா? அல்லது புதியதாக எடுக்கப்பட்ட புகைப்படமா? மீண்டும் ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் வந்துவிட்டதா? என்பது குறித்து எதுவும் புரியாமல் ஓவியா ஆர்மினர் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் ஓவியாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது