ஓவியா-ஆரவ் லிப்கிஸ் குறும்படத்தை கமல் வெளியிடுவது எப்போது?
- IndiaGlitz, [Friday,August 04 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் ஓவியா-ஆரவ் இடையே நட்பையும் மீறி காதல் உண்டாகிவிட்டது என்று. ஆனால் திடீரென ஆரவ், தான் ஓவியாவை காதலிக்கவில்லை, காதலிப்பதாக சொல்லவும் இல்லை என்று கூறியது ஓவியாவை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
காதல் இல்லைன்னா ஏன் எனக்கு முத்தம் கொடுத்தாய் என்று ஓவியா கேட்பது ஒன்றே இருவரின் காதலுக்கு சாட்சியாக உள்ளது. ஆனால் நான் முத்தம் கொடுக்கவில்லை, வேறு யார் முத்தம் கொடுத்தது என்று எனக்கு தெரியாது என்று ஆரவ் கூறியதை யாரும் உண்மை என்று எடுத்து கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் ஜூலி மாதிரி அஞ்சு பைசாவுக்கு பத்து பொய் கூறும் கேரக்டர் இல்லை ஓவியா. அவர் வாயில் இருந்து கோடி ரூபாய் கொடுத்தாலும் பொய் வராது. இதை ஆரவ்வே பலமுறை ஒப்ப்புக்கொண்டுள்ளார். எனவே பொய் சொல்வது ஆரவ் தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் பரபரப்பை அதிகரிக்க ஓவியா-ஆரவ் லிப்கிஸ் கொடுத்த காட்சி குறும்படமாக தயாராகிவிட்டதாகவும், அதை எந்த நேரமும் கமல் வெளியிடலாம் என்று பிக்பாஸ் தரப்பில் இருந்து செய்தி கசிந்துள்ளது. ஓவியா இனி உனக்கு ரெண்டாவது சான்ஸ் தரமாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டதால் ஒருவேளை குறும்படத்திற்கு பின் ஆரவ் மனம் திருந்தி வந்தாலும் ஓவியா அவரை ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியே!