உனக்கு இதயமே இல்லையா? அலட்சியப்படுத்திய ஜூலிக்கு அட்வைஸ் செய்த ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நாளுக்கு நாள் எப்படி ஆதரவு அதிகரித்து வருகிறதோ அதேபோல் ஜூலி மீது நாளுக்கு நாள் வெறுப்பும் அதிகரித்து வருகிறது. தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை, ஜூலியின் எதிர்காலத்திற்காக அவரை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஓவியா இருந்தாலும் ஜூலி ஓவியாவை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார்.
நேற்றைய நிகழ்ச்சியின்போது, 'எல்லோரையும் மனம் புண்படும்படி பேசக்கூடாது என்று நீ கூறியதில் அர்த்தமே இல்லை என்று ஜூலியிடம் கூறிய ஓவியா, முதலில் நீ அதை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதயம் என்ற ஒன்று இருந்தால் தான் மற்றவர்களின் இதயம் வலிக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் உனக்கு இதயமே இல்லாததால்தான் அந்த மாதிரி செயல்படுகிறாய் என்றும் ஓவியா மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
ஆனாலும் ஓவியாவின் அறிவுரையை மீண்டும் அலட்சியம் செய்த ஜூலி, அவருக்கு பதிலே சொல்லாமல் விலகி செல்கிறார். பொய் சொல்லிவிட்டோம், தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் ஜாலியாக பாட்டுப்பாடி ஆட்டம் போடும் ஜூலியை ஓவியா மட்டுமின்றி அனைவருமே வெறுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com