மீனவர்களிடையே பரவும் சிகிச்சையே இல்லாத மர்மநோய்… பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!
- IndiaGlitz, [Monday,November 23 2020]
கொரோனா தொற்று ஆரம்பித்து 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பல உலக நாடுகள் தவித்து வருகின்றன. இதற்கு நடுவில் புபோனியா பிளேக், ஆப்பிரிக்க காய்ச்சல் எனப் பல புதிய நோய்களும் மக்களை தாக்க ஆரம்பித்து விட்டது. இதுபோதாது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பொலிவியாவில் எபோலாவை ஒத்த புதிய நோய்த்தொற்று ஒன்று மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது பற்றி விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தனர். முன்னதாக எபோலா காய்ச்சல் பல தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவி பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது. அதை ஒத்த புதிய வைரஸ் தொற்று தற்போது பொலிவியாவில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புதிய மர்ம நோய் ஒன்று பாதிப்பை ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகலின் தலைநகர் டைகரில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு புதிய நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய பிறகே இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் சருமத்தில் அரிப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் பெரிய பெரிய கொப்புளங்கள் ஏற்பட்டு பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் இந்த நோய்க்கு என்ன சிகிச்சை வழங்குவது என்று அந்நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்த விளக்கம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் புதிய கடல்நோய் குறித்து தற்போது ஆய்வுகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
A severe contagious disease broke out in Senegal, spread among fishermen who in turn, infected their families and those they came in contact with. The public is urged to stay away from the sea and beach until a solution is reached. Speedy recovery folks @PaSulaymangaye @Mustapha5 pic.twitter.com/rf4WTDAbAh
— ML Fatty (@MLFatty4) November 21, 2020