பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: வெற்றிமாறன் உள்பட 100 இயக்குனர்கள் கூட்டறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாடு முழுவதிலும் உள்ள 100 இயக்குனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், கோபிநயினார், பிரியர்தர்ஷன் ஆகியோர்களும் அடங்குவர்.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் இயக்குனர்கள் ஒரு இணையதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளனர். 'ஜனநாயகத்தை காப்போம்' என்ற தலைப்பில் உள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் சிந்தித்து வாக்களிக்கவில்லை எனில் பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் வகுப்புவாத சூழலை உருவாக்கி தாக்குதல் நடத்துவது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி தலித் மக்கள் கொல்லப்படுவது, தேசப்பற்று என்ற வார்த்தையை தனது ஆயுதமாக பயன்படுத்துவது ஆகியவற்றில் பாஜக ஈடுபட்டு வருகிறது
தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ ஏதாவது ஒரு பிரச்னைக்கு குரல் கொடுத்தால் உடனே அவர் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். பாஜகவிற்கு எதிராக யாராவது கருத்து சொன்னால் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எனவேதான் நம்மிடையே இருந்த முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை இப்போது இல்லை. நாட்டின் பாதுகாப்பு படைகளை அவர்களுடைய தந்திரங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தேவையற்ற போர் சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிகொள்கின்றனர்.
தகுதியற்றவர்கள் முக்கிய நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பணக்காரர்களின் கைக்கூலியாக பாஜக செயல்படுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற, நம்முடைய அனைத்து வகையான சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments