பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: வெற்றிமாறன் உள்பட 100 இயக்குனர்கள் கூட்டறிக்கை

  • IndiaGlitz, [Saturday,March 30 2019]

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாடு முழுவதிலும் உள்ள 100 இயக்குனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், கோபிநயினார், பிரியர்தர்ஷன் ஆகியோர்களும் அடங்குவர்.

நாடு முழுவதிலும் உள்ள சுமார் இயக்குனர்கள் ஒரு இணையதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளனர். 'ஜனநாயகத்தை காப்போம்' என்ற தலைப்பில் உள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் சிந்தித்து வாக்களிக்கவில்லை எனில் பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் வகுப்புவாத சூழலை உருவாக்கி தாக்குதல் நடத்துவது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி தலித் மக்கள் கொல்லப்படுவது, தேசப்பற்று என்ற வார்த்தையை தனது ஆயுதமாக பயன்படுத்துவது ஆகியவற்றில் பாஜக ஈடுபட்டு வருகிறது

தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ ஏதாவது ஒரு பிரச்னைக்கு குரல் கொடுத்தால் உடனே அவர் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். பாஜகவிற்கு எதிராக யாராவது கருத்து சொன்னால் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எனவேதான் நம்மிடையே இருந்த முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை இப்போது இல்லை. நாட்டின் பாதுகாப்பு படைகளை அவர்களுடைய தந்திரங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தேவையற்ற போர் சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிகொள்கின்றனர்.

தகுதியற்றவர்கள் முக்கிய நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பணக்காரர்களின் கைக்கூலியாக பாஜக செயல்படுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற, நம்முடைய அனைத்து வகையான சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஐடி ரெய்டு குறித்து துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் நேற்று நள்ளிரவு சோதனை நடத்த வந்தனர்

சிவகார்த்திகேயனின் 18வது படத்தை இயக்கும் இயக்குனர்!

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' திரைப்படம் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜாவுக்காகவே தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினகரனுக்கு கிடைக்காதது நிர்மலாதேவியின் வக்கீலுக்கு கிடைத்துவிட்டதே!

ஆர்.கே.நகரில் இரட்டை இலை மற்றும் உதயசூரியனை வீழ்த்திய ராசியான குக்கர் சின்னத்தை பெற டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தினார்.

அன்னை சோனியா காந்தி பிரதமரா! நீங்களுமா ஸ்டாலின்?

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசிலர் வாய்தவறி தவறான தகவல்களை அளித்து வருவதும், தலைவர்கள் பேசும் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் .

கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது