ஆள் நடமாட்டமே இல்லாத எவரெஸ்ட்டிலும் கொரோனா? அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என நேபாள அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் இந்தச் சிகரத்திலும் தற்போது 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறி ஒரு நிறுவனம் மலையேற்றத்தை ரத்து செய்து இருக்கிறது.
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் வரும் வருமானத்தை எதிர்ப்பர்த்து நேபாள அரசு மலையேற்றத்திற்கு அனுமதி அளித்து இருக்கிறது.
இந்நிலையில் எவரெஸ்ட் மலை சிகரத்தில் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ள விமானிகள், மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மலை சிகரத்தின் அடியில் உள்ள கேம்ப்களில் உள்ளூர் கைடுகள், மருந்து ஆளுநர்கள் என மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் ஃபர்டான்பேக் எனும் மலையேற்ற நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் இந்த நிறுவனம் இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு முதல் மனித நடமாட்டமே இல்லாத எவரெஸ்ட் சிகரத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.