6 இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு… வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டி?
Send us your feedback to audioarticles@vaarta.com
3 ஒருநாள், 3 டி20 போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் நிலையில் இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சுற்றுப்பயணத்திற்குப் பின்பு இந்திய அணியினர் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இதன்படி அகமதாபாத்தில் 6 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் துவங்கி நடைபெற இருக்கின்றன. இதுமுடிந்து கொல்கத்தாவில் வரும் 16 ஆம் தேதி டி20 போட்டிகள் துவங்கவுள்ளன. இப்படியிருக்கும்போது இந்திய அணியில் ஓப்பனராக இருந்துவரும் ஷிகர் தவான், கெயிக்வாட் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இவர்களைத் தவிர நெட் பவுலிங்கிங் வீசும் நவ்தீப் சைனி மற்றும் அணியோடு நெருங்கிய தொடர்புடைய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. சைனி அடுத்தத் தர வரிசை வீரர்களில் முன்னணியில் இருக்கிறார். அணியில் இவர்களுக்குப் பதிலாக தற்போது ஷாருக்கான், சாய் கிஷோர், ரிஷி தவான் ஆகிய இளம் வீரர்கள் களம் இறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதற்கு பிசிசிஐயே காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். காரணம் இங்கிலாந்து, ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் வீரர்களை கடுமையான பாதுகாப்புடன் தனி விமானம் மூலம் பிசிசிஐ அழைத்துச்சென்றது. ஆனால் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு வீரர்கள் அவரவர்களின் சொந்த பயணத்தில் வருமாறு பிசிசிஐ தெரிவித்துவிட்டது.
பொது போக்குவரத்தை பயன்படுத்தியதாலேயே வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பிசிசிஐ கஞ்சத்தனம் காட்டாமல் கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிம்மதியாக விளையாடி இருக்க முடியும். தற்போது 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனை வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com