எங்க டைரக்டரோட கேர்ள் பிரண்ட் தான் எலான் மஸ்க் தங்கச்சி.. விஜய் ஆண்டனி

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

எங்க டைரக்டரோட கேர்ள் பிரண்ட் தான் எலான் மஸ்க் தங்கச்சி என ’கொலை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர், இசையமைப்பாளர் இயக்குனர் விஜய் ஆண்டனி பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி ’இந்த படம் நன்றாக வந்திருக்கிறது என்றும் ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் பல ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழில் இவர் ’விடியும் முன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்றும், அந்த படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றும், அதே ஸ்டைலில் தான் ’கொலை’ படத்தையும் இயக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்கிறேன், இயக்குனர் பாலாஜி குமார், எலான் மஸ்க் தங்கையின் நெருங்கிய நண்பர், ஆனால் கேர்ள் பிரண்டா என்பதை பின்னர் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று விஜய் ஆண்டனி கூறினார்.

விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.