குடித்துவிட்டு ரகளை செய்தாரா ஓட்டேரி சிவா? கண்ணீருடன் அளித்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,February 08 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய கோமாளி ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டுமே வந்த நிலையில் அடுத்த வாரம் நீக்கப்பட்டார். இதற்கு குக் வித் கோமாளி செட்டில் குடித்துவிட்டு ரகளை செய்ததால் தான் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவர் கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் புதிய குக்கூகள் மற்றும் கோமாளிகளால் இந்த நிகழ்ச்சி முதல் வாரமே வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஓட்டேரி சிவா, சிலுமிசம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து, நடிகை ரவீனா புதிய கோமாளிகளாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஓட்டேரி சிவா ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குடித்துவிட்டு அநாகரிமாக நடந்து கொண்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து அவர் விளக்கம் அளித்த போது, ‘நான் நன்றாக சாப்பிடுவேனே தவிர குடிப்பழக்கம் எனக்கு சுத்தமாக இல்லை, நான் குடித்துவிட்டு செட்டுக்கு வந்தேன் என்று கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. இப்போது நான் விஷால் ஆபிசில் தான் இருக்கிறேன், என்னிடம் பழகிய அனைவருக்கும் நான் குடிப்பழக்கம் இல்லாதவன் என்று தெரியும்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.