'மாஸ்டர்' பாணியில் ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் 'வலிமை'?

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

’மாஸ்டர்’ பாணியில் திரைக்கு வந்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு திரையரங்குகள் தரப்பிலிருந்து பெரும் அதிருப்தி ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தையும் இதேபோல் திரையரங்குகளில் வெளியான ஒரு சில நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமேசான் பிரைம் உள்பட இரண்டு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ‘வலிமை’ திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.