வெளிமாநில பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: தமிழக அரசின் அடுத்த அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் 31ம் தேதி இரவு வரை நிறுத்தப்படும் என சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 31ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தம் குறித்த எவ்விதமான அறிவிப்பும் இதுவரை இல்லை என்றாலும் ரயில்வே துறையில் இருந்து இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை காக்க வேறு வழியின்றி இவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout