மீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்ம ஊர் வடிவேலுவுக்கு அடுத்தபடியாக நெட்டிசன்களால் அதிகம் முறை உபயோகிக்கப்பட்ட மீம் மெட்டீரியல் ஆன ஒசிட்டா ஐஹீம் இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நம்முடைய எல்லா வகையான மனநிலைக்கும் அவரது முகம் பொருந்திப்போகும். அப்படி ஒரு முக அம்சத்தை கொண்டவர் ஒசிட்டா ஐஹீம். பலரும் நினைப்பது போல அவர் சிறுவன் அல்ல. இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடும் அவர் 1982-ம் ஆண்டில் பிறந்தவர். நைஜீரியாவைச் சேர்ந்த ஒசிட்டா அந்நாட்டுத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது நெட்டிசன்கள் பயன்படுத்தும் அனைத்து படங்களுமே, அவரின் படத்தில் இடம்பெற்றவைதான்.
தனது 16 வயதிலேயே ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு ஒசிட்டா ஐஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல விருதுகள், பாராட்டுகளை குவித்த ஒசிட்டாவுக்கு, 2011-ம் ஆண்டில் நைஜீரிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக, ஃபெடரல் குடியரசின் விருது குடியரசுத்தலைவரால் வழங்கப்பட்டது.இன்று அவரின் பிறந்தநாள் என்பதால், நாடு, மொழி கடந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy Birth Day #ositaIheme pic.twitter.com/zmsRWL45vx
— Ŧ๏ɭɭ๏ฬєг_קкןร (@follower_pkjs) February 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Yugan Surya
Contact at support@indiaglitz.com
Comments