சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்திற்கு கிடைத்த ஆஸ்கார் கெளரவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த படத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் நடுநிலை விமர்சகர்கள் தங்களது மிகப்பெரிய ஆதரவு அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்த ஆண்டின் பல தேசிய விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ஆஸ்கர் அமைப்பு இந்த படத்திற்கு ஒரு மிகச்சிறந்த கவுரவத்தை அளித்துள்ளது. ஆஸ்கர் அமைப்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து உள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுவதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com