சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'ஆஸ்கார் வின்னர்'
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே விருது 'பீரியட்' என்ற குறும்படத்திற்கு கிடைத்த விருதுதான். டீன் ஏஜ் பெண்கள் சந்திக்கும் பீரியட் பிரச்சனைகள் இந்த படத்தில் கூறப்பட்டிருந்த விதமே ஆஸ்கார் விருது பெற காரணமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த குறும்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கனித் மோங்கா' என்பவர்தான் சூர்யாவின் 38வது படமான 'சூர்யா 38' படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது பெற்ற கனித் மோங்காவுக்கு 2D எண்டர்டெயிய்ன்மெண்ட் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'சூர்யா 38' படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சூர்யா நடித்து முடித்துள்ள 'என்.ஜி.கே' மற்றும் நடித்து கொண்டிருக்கும் 'காப்பான்' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
Congratulations @guneetm, on your Academy Awards! We are proud to be associated with you for #Suriya38! pic.twitter.com/Vj7P6pGZPF
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments