இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.. பட்டியலில் வேறு யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

இயக்குனர் எஸ்எஸ் எஸ்.எஸ்.ராஜமெளலி உட்பட சில இந்திய திரை உலக பிரபலங்களுக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் ஆதில் சில இந்திய திரை உலக பிரபலங்களின் பெயர்களும் உள்ளது. ஏற்கனவே சூர்யா, ஏ ஆர் ரகுமான், மணிரத்னம் உள்ளிட்டவர்கள் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குனர் ரீமா தாஸ், நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது புதிதாக 487 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அழைப்புகள் அனைத்தும் ஏற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஆஸ்கர் விருது குழுவின் சிஇஓ கூறிய போது ’இந்த ஆண்டிற்கான புதிய ஆஸ்கர் விருது குழு உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது குழுவின் பட்டியலில் இடம் பெற போகும் இந்திய திரை உலகை பிரபலங்களான எஸ்எஸ் ராஜமெளலி உள்பட அனைவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.