2019 ஆஸ்கர் விருதுகள்: விருதுகளை குவிக்க தொடங்கிய 'பிளாக் பாந்தர்'
Send us your feedback to audioarticles@vaarta.com
2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு சற்றுமுன் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'பிளாக் பாந்தர்' திரைப்படம் விருதுகளை குவிக்க தொடங்கிவிட்டது. சிறந்த ஆடை வடிவமைப்புகாக ஆஸ்கர் விருதை 'பிளாக் பாந்தர்' படத்தில் பணியாற்றிய ரூத் கார்டர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் விருதினை இதே படத்தில் பணியாற்றிய ஹன்னா பீச்லர், ஆகியோர் பெற்றுள்ளனர்.
மேலும் சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது VICE படத்தில் பணியாற்றிய கிரேக் கேனோம், கேட் பிஸ்கோ, பாட்ரிசியா தெஹானே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ROMA படத்தின் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது; சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவிலும் ROMA படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
Bohemian Rhapsody என்ற படத்துக்கு சிறந்த ஒலி கலவை, ஒலித்தொகுப்புக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ரெஜினா கிங்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது. If Beale street could talk என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான ரெஜினாவிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருது 'Free Solo' படத்துக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்களின் முழு விபரங்களை இன்னும் சிறிது நேரத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments