சர்வதேச தமிழ் திரைப்பட விழா.. 'விக்ரம்' படத்திற்கு குவிந்த விருதுகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் குவிந்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பு, லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, இசையமைப்பாளர் அனிருத்தின் அதிரடி இசை, குறிப்பாக பின்னணி இசை ஆகியவற்றை கூறலாம்.
இந்த நிலையில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு 8 விருதுகள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படம் பெற்ற விருதுகளின் விவரங்கள் இதோ:
1. 2022ஆம் ஆண்டின் சிறந்த படம்
2. சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
3. சிறந்த இசையமைப்பாளர் - அனிருத்
4. சிறந்த திரைக்கதை: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார்
5. சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: பகத் பாசில்
6. சிறந்த வில்லன் நடிகர்: விஜய் சேதுபதி
7. சிறந்த எடிட்டர்: பிலோமின் ராஜ்
8. சிறந்த ஸ்டண்ட் டைரக்டர்: அன்பறிவ்
#OTIFF2022 Awardees List 💐@ThanthiTV @TamilTheHindu @PTTVOnlineNews @SunTV @KskSelvaKumaar @Rajini_Japan @SureshDaina pic.twitter.com/4eqzkNEMEr
— Osaka Tamil International Film Festival (@osaka_tamil) May 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout