சர்வதேச தமிழ் திரைப்பட விழா.. 'விக்ரம்' படத்திற்கு குவிந்த விருதுகள்..!

  • IndiaGlitz, [Sunday,May 26 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் குவிந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பு, லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, இசையமைப்பாளர் அனிருத்தின் அதிரடி இசை, குறிப்பாக பின்னணி இசை ஆகியவற்றை கூறலாம்.

இந்த நிலையில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு 8 விருதுகள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படம் பெற்ற விருதுகளின் விவரங்கள் இதோ:

1. 2022ஆம் ஆண்டின் சிறந்த படம்

2. சிறந்த நடிகர் - கமல்ஹாசன்

3. சிறந்த இசையமைப்பாளர் - அனிருத்

4. சிறந்த திரைக்கதை: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார்

5. சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: பகத் பாசில்

6. சிறந்த வில்லன் நடிகர்: விஜய் சேதுபதி

7. சிறந்த எடிட்டர்: பிலோமின் ராஜ்

8. சிறந்த ஸ்டண்ட் டைரக்டர்: அன்பறிவ்

More News

கவினின் 'ஸ்டார்' படத்தின் முக்கிய காட்சியின் மேக்கிங்.. இயக்குனர் இளன் வெளியிட்ட வீடியோ..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் இளன் தனது சமூக வலைதள பக்கத்தில்

'இந்தியன் 2', 'புஷ்பா 2' ரிலீஸ் தேதியால் 'தங்கலான்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுக்கு வந்து சரியான ரிலீஸ் தேதிக்காக படக்குழுவினர் காத்திருக்கும் நிலையில்

'இந்தியன் 2' ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் செய்த தரமான சம்பவம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட

தளபதி விஜய் வீட்டிற்கு திடீரென சென்ற விக்ரமன் - கே.எஸ்.ரவிகுமார்.. என்ன காரணம்?

தளபதி விஜய் வீட்டிற்கு இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்: குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.