பாலாஜி தரணீதரனின் 'ஒரு பக்க கதை': சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். நினைவிழந்த நிலையில் அவர் பேசிய வசனங்கள், 'ப்பாஆஆ... என்ற ஒரே வார்த்தை அவரை நீண்ட நாட்களுக்கு நினைவில் வைக்கும்படி இருந்தது.

இந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து பாலாஜி தரணிதரன் இயக்கிய அடுத்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. 'ஒரு பக்க கதை' என்ற டைட்டிலில் தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே மிக விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ், முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். வாசன் விஷூவல் வெண்ட்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

கம்யூனிஸ்ட் கட்சியின் விழாவுக்கு கமல் வாழ்த்து

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து மிக விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிபிஎம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக வதந்தி

விஷாலின் 'துப்பறிவாளன்' ஒரு முன்னோட்டம்

50 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழில் துப்பறியும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஜெயசங்கரின் 'சிஐடி சங்கர், வல்லவனுக்கு வல்லவன் முதல் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' வரை

தமிழ்கன் அட்மின் பிடிபட்டது எப்படி?

ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளை பிடிப்பதே தனது முதல் வேலை என்றும், ஆறு மாதத்திற்குள் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் விஷால் சூளுரைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே

தமிழ்கன் அட்மின் அதிரடி கைது

தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது தமிழ் ராக்கர்ஸ்களே தயாராக இருங்கள், உங்களை கண்டுபிடித்து காட்டுகிறேன் என்று விஷால் சவால் விட்டார்.

சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் சூப்பர் ஹிட் தென்னிந்திய படம்

இதுவரை அமீர்கானின் '3 இடியட்ஸ்', 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற திரைப்படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் பிரமாண்டமாக ரிலீஸாகி நல்ல வசூலை பெற்றது என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம்