ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - மௌன ராகம் கார்த்திக்காக மாறிய கெளதம் கார்த்திக்
விஜய் சேதுபதியின் தற்போதைய உச்சநிலை மார்க்கெட்டை பயன்படுத்தி ஒரு பரிசார்த்தமான டார்க் காமடி வகை படத்தை தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் கம் தயாரிப்பாளர் ஆறுமுக குமார். அவரின் இந்த புது பாணி கதை ரசிகர்களை எவ்வளவு கவரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
எமன் என்கிற ஆந்திர திருடர்குல காட்டு வாசியான விஜய் சேதுபதி ஒரு பங்களாவில் கை வரிசை காட்டும்போது ஒரு இளம் பெண்னின் புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்து அவளை சென்னையில் படிக்கும் கல்லூரியிலிருந்து கடத்த திட்டம் தீட்டுகிறார். அபாயலக்ஷ்மி என்கிற பெயர் கொண்ட அந்த பெண் நிஹாரிகா கோணிடால தன் சீனியரான கவுதம் கார்த்திக்குடன் நட்பு கொண்டிருருக்க இடையில் வரும் விஜய் சேதுபதி ஏன் அவரைக் கடத்த பாக்கிறார் அதில் அவர் வெற்றி கண்டாரா? இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்குள் அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதி திரைக்கதை.
எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக ஊதித்தள்ளும் விஜய் சேதுபதி இதில் ஏனோ சோர்வாக காணப்படுவதோடு மட்டுமில்லாமல் அவருடைய முந்தைய படங்களின் சில முக பாவனைகளையே வைத்து படமுழுக்க ஒப்பேற்றியிருப்பதுபோல தோன்றுகிறது. படத்தில் அவர் பல வேடங்கள் போட்டாலும் ஒன்றிலுமே நாம் பார்த்து வியக்கவோ இல்லை சிரித்து மகிழவோ எதுவுமே இல்லாதது பெரிய ஏமாற்றம். மாறாக கொஞ்சம் லூசுத்தனமான கல்லூரி மாணவனாக வரும் கவுதம் கார்த்திக் பெரிதும் கவர்கிறார். ஒரு காட்சியில் விஜய் சேதுபதி அவரிடம் உனக்கு மௌன ராகம் கார்த்திக்குனு நினைப்பா என்று கேட்கிறார். சும்மா சொல்லக்கூடாது எப்படி அந்த படத்தில் அவர் அப்பா எல்லோரையும் விட மனதில் நின்றாரோ அதே மாதிரி இந்த படத்தின் ஒரே ஆறுதல் கவுதம்த்தான். கதாநாயகி நிஹாரிகா கோணிடால அவர் பாத்திரத்திற்கேற்ப நல்ல தேர்வு இயக்குனரும் அவருக்கு ரொம்ப வேலை கொடுக்காமல் அளவாக பயன்படுத்தியிருப்பதால் அவரும் பார்வையாளர்களும் தப்பித்து கொள்கிறார்கள். டேனியல் அன்னி போப் படத்தில் நிறைய சிரமப்பட்டு கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மற்றும் விக்ரம் வேதவில் கலக்கிய ராஜ்குமார் விஜய் சேதுபதியின் நண்பராக வந்து படுத்தி எடுக்கிறார். காட்டு கத்து கத்துவதே காமடி என்று செய்திருக்கிறார். காயத்ரீ விஜி சந்திரசேகர் மற்றும் ரமேஷ் திலக் போன்ற திறமையானவர்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வேதனை.
படத்தின் மைய கரு என்னவோ சுவாரசியமானது தான் அதே போல் இடைவேளை வரை ஒரு எதிர்பார்ப்புடன் கதையும் நகர்கிறது. பாடல்களிலும் வசனங்களிலும் சில தத்துவங்களையும் உதிர்கிறது படம். உதாரணத்திற்கு ராமன் ராவணனை வைத்து விஜய் சேதுபதி பேசும் வசனம் undefined படத்தில் குப்பன் சுப்பன் என்று மாற்றப்பட்டிருக்கிறது)
படத்தின் ஆகா பெரிய பலவீனம் கதை நகராமல் நொண்டி அடித்து கொண்டு ஒரே இடத்தில சுத்துவதும் டார்க் காமடி ஒர்க் அவுட் ஆகாமல் சறுக்குவதும்தான். கதையின் முக்கிய பாத்திரங்களான விஜய் சேதுபதி நிஹாரிகா கவுதம் ஆகியோர் ஒருவருக்கொருவர் மோதாமல் தனி தனியே திரிவது பார்வையாளர்களை போலவே கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடுகிறது.
பாடல்கள் கேட்கும்படியாக இருப்பதோடு பின்னணி இசையும் கதையை நகர்த்த பயன்படுவதால் ஜஸ்டின் பிரபாகரன் மீண்டும் ஒரு முறை கவனம் ஈர்க்கிறார். அவருக்கு அடுத்த படியாக நீண்டு கொண்டே தாறுமாறாக போகும் காட்சிகளை தன்னால் இயன்ற அளவுக்கு கோர்வையாக தந்திருக்கும் பட தொகுப்பாளர் ஆர் கோவிந்தராஜூம் பாராட்டப்பட வேண்டியவர் . எழுதி இயக்கியிருக்கும் ஆறுமுக குமார் ஒரு வித்தியாசமான கதை கருவை வித்தியாசமான நகர்வுடன் தர முயற்சித்திருக்கிறார் காமடி கை கொடுக்காததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது undefined அதே சமயம் இன்றய தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதியை வைத்து கொண்டு மிக குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்து வியாபாரம் செய்ததில் ஒரு தயாரிப்பாளராக அவர் ஜெயித்திருக்கிறார் என்பதும் நிதர்சனம்
வித்தியாசமான படங்களை விரும்புபவர்கள் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லலாம்
Comments