விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் சற்றுமுன் நடைபெற்றது. இந்த விழாவில் பேசியவர்களின் சில துளிகள்:

கவுதம் கார்த்திக்: இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்தவர் விஜய்சேதுபதி. அவருக்கு எனது நன்றிகள். அவர் தான் இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று தயாரிப்பாளர், இயக்குனரிடம் பரிந்துரை செய்தார். நல்ல மனிதநேயம் கொண்டவர். ஒரு கேரக்டருக்காக இவ்வளவு மெனக்கெடும் நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை

ரமேஷ் திலக்: இந்த படத்தின் குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பணியாற்றினோம். இந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்

நடிகை நிஹாரிகா: எனக்கு தமிழ் மொழி தெரியாததால் முதல் நாள் படப்பிடிப்பின்போது டென்ஷனாக இருந்தேன். ஆனால் படக்குழுவினர் ஒவ்வொருவரும் அவர்களில் ஒருவராகவே என்னை நடத்திய விதம், என்னுடைய பயத்தை போக்கடித்தது. எனக்கு இந்த படம் மூலம் தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்

காயத்ரி: இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் கோதாவரி: இந்த படத்தில் விஜய்சேதுபதி இருக்கின்றார் என்பதை அறிந்தவுடன் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நடிகர் டேனியல்: இந்த படம் வெளிவந்தவுடன் 'ஆம்லேட் திருடன்' என்ற வசனம் வைரலாகும்.

More News

மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா?

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதை தான் சவரக்கத்தி: ஜி.ஆர்.ஆதித்யா

மிஷ்கின், ராம், பூர்ண நடிப்பில் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி' திரைப்பம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.