அஜித்-விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை. சொன்னது யார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,June 18 2016]
நடிகராக வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டில் நுழைந்து பின்னர் மேனேஜர், நிர்வாகத்தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் செந்தில். இவர் கடந்த வாரம் வெளிவந்த 'ஒருநாள் கூத்து' படத்தில் நடிகை நிவேதாவுக்கு அப்பாவாக நடித்தார். இவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றதால் இவர் முழு நேர நடிகராக விரைவில் மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து செந்தில் கூறியதாவது: 'ஒருநாள் கூத்து' படத்தின் இயக்குநர் நெல்சன் எனக்கு கனமான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு அளித்தார். இப்போது அந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. நான் நடிகனாக வேண்டும் என்று கண்ட கனவை இப்படத்தில் வாய்ப்பு அளித்து நிறைவேற்றி வைத்த இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நானும் எல்லோரையும் போல ஹீரோவாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். காலம் கடந்து இப்போது எனக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நான் முழுமையாக பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். ஒரு நடிகன் என்றால் இயக்குநர் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். இந்த சின்ன வயதில் அப்பாவாக நடித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.
இப்போது அப்பாவாக நடிப்பத்தால் நடிகர் விஜய் , அஜித் , த்ரிஷா , நயன்தாரா போன்ற அனைவருக்கும் அப்பாவாக நடிக்க ஆவலாக உள்ளேன். என்னுடைய நடிப்பில் நடிகர் விஜய்குமார் அவர்களின் சாயல் இருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். தற்போது நான் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ப்ருஸ் லீ திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் அதை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் பிஜேஷ் நாகேஷின் தந்தையாக நடித்து வருகிறேன்' என்று கூறினார்.