'ஒருநாள் கூத்து' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,May 24 2016]

அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் தினேஷ் நாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஒருநாள் கூத்து'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் தேதியுடன் கூடிய விளம்பரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினேஷ், மியா ஜார்ஜ் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், ரித்வைகா, பாலசரவணன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். 'பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய்' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.