பிரபல ரேடியோ ஜாக்கியை திருமணம் செய்கிறார் ரமேஷ் திலக்

  • IndiaGlitz, [Monday,January 02 2017]

ரேடியா ஜாக்கியாக இருந்து தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான ரமேஷ் திலக் சூதுகவ்வும், நேரம், உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். கடந்த ஆண்டு வெளியான 'ஒருநாள் கூத்து', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ரமேஷ் திலக் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

இந்நிலையில் ரேடியோ ஜாக்கியான ரமேஷ் திலக் இன்னொரு புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியான நவலட்சுமி என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இந்த தகவலை நேற்றைய புத்தாண்டு தினத்தில் ரமேஷ் திலக் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

புரியாத புதிர், டிக் டிக் டிக், இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து வரும் ரமேஷ் திலக், சினிமாவிலும் இல்வாழ்க்கையிலும் இந்த வருடம் சிறந்து விளங்க நமது வாழ்த்துக்கள்.

More News

தென்னிந்திய திரையுலகில் சாதனை படைத்தது 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டிரைலர் புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன் ரிலீஸ்...

ஜனவரி 6-ல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒலிம்பிக் சாதனையாளரின் படம்

புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு படங்கள் அவ்வப்போது பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்று வருவதை பார்த்து வருகிறோம்...

சசிகலாவுடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த சக்தி வாய்ந்த பதவியான...

முதல்முறையாக அரசும் மக்களும் ஒரே திசையில் பயணம். பிரதமர் நரேந்திர மோடி உரை

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த...