இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம். மறந்துவிடாதீர்கள் மக்களே

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்ற கூறப்பட்ட நிலையில் அதே நாளில் சென்னை ஐகோர்ட் அசல் ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

ஆனால் இந்த வழக்கை மீண்டும் கடந்த 4ஆம் தேதி விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், செப்டம்பர் 6ஆம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இடைக்கால உத்தரவால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்களுக்கு அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை என்பது சோகம்

எனவே இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும் இது இறுதியான உத்தரவு இல்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழக அரசு தாக்கல் செய்யும் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட முடிவை சென்னை ஐகோர்ட் எடுக்கும்.

இருப்பினும் இன்று முதல் ஓட்டுனர் உரிமம் கையில் இல்லை என்றால் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் என்று சட்டத்தில் உள்ளதால் இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.