மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு-தண்ணீர்: விஷால் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 03 2017]

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த ஐந்து நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் விடிய விடிய சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேறி உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வெள்ளம் பாதித்த பொதுமக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தனது வடபழனியில் உள்ள அலுவலகத்தில் உணவு மற்றும் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள தன்னார்வ மீட்பு குழுவினர் களமிறங்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' சென்சார் தகவல்கள்

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

சக்க போடு போடு ராஜா படத்தில் இணைந்த ஹரிஷ் கல்யாண்

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்பு,

4 வயது சிறுவனின் உயிரை குடித்த ஸ்னாக்ஸ் பாக்கெட்

வியாபார போட்டியின் காரணமாக உணவுபொருட்கள், ஸ்னாக்ஸ் பொருட்களின் உற்பத்தியாளர்கள் விதவிதமாக சிந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளின் ஸ்காக்ஸ் பாக்கெட்டுகளில் மினியேச்சர்

சந்தர்ப்பம் பார்த்து அமலாபாலிடம் புரபோஸ் செய்த ஆர்யா

நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை என்று புதுச்சேரி அமைச்சர் கூறி

கமல்ஹாசனின் 11வது அவதாரத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் கண்டனம்

பிரபல வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொடர் எழுதி வருவது தெரிந்ததே.