சபாநாயகருடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு
- IndiaGlitz, [Friday,February 17 2017]
தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்கு நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெட்டுப்பு கோர உள்ளார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் ரோல் மிகவும் முக்கியம். அவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்கும்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் அவர்களை ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களான மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன், சண்முகநாதன் ஆகியோர்கள் திடீரென சந்தித்துள்ளனர். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நிலைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் ஒருவேளை 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தால் சபாநாயகர் ஓட்டு போடுவார். அவரது ஒரு ஓட்டு ஆட்சியை முடிவு செய்யும். அந்த நிலை நாளை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.