அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்தவர்: பாண்டுவுக்கு ஓபிஎஸ் இரங்கல்

அதிமுக கொடியை வடிவமைத்துக் கொடுத்தவரும் நகைச்சுவை நடிகருமான பாண்டுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கழகத்தின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவரும் புரட்சித்தலைவரின்பால் பேரன்பு கொண்டவருமான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர், சிறந்த ஓவியர் பாண்டு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பாண்டு அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் இச்சூழலில் பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அவசிய தேவைகள் தவிர வெளியே செல்வதை தவிர்த்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

மே 16 வரை முழு ஊரடங்கு… உத்தரவு பிறப்பித்த கேரள முதல்வர்!

கேரளாவில் மே 8 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு  உத்தரவை வெளியிட்டு உள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு பாட்டு பாடும் வீடியோ வைரல்!

தமிழ் திரைஉலகின் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

டீன் ஏஜில் நண்பர்களுடன் அஜித்: வைரல் புகைப்படத்தில் இன்னொரு பிரபலம்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் அப்டேட் ஒரு ஆண்டுக்கு மேல் வராமல் இருந்தாலும் அவரது செய்திகள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வராத நாளே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாக தவிக்கும் குழந்தைகளுக்கு… இளம் நடிகர் செய்த காரியம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியக் காதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் சந்தீப் கிஷன்.

தமிழகத்தில் டோட்டலா டெபாசிட் இழந்த கட்சிகள்… மூன்றாவது கட்சி சாத்தியமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை வெற்றிப்பெற்று