கல்வெட்டு உண்மையானது: அதிமுகவின் ஒரே எம்பியான ஓபிஎஸ் மகன்!
- IndiaGlitz, [Friday,May 24 2019]
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஆர்வக்கோளாறில் தேனி தொகுதியின் எம்பி என கோவில் கல்வெட்டு ஒன்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் பெயரை பொறித்து சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது அந்த கல்வெட்டு உண்மையாகியுள்ளது.
ஆம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றிச்சான்றிதழையும் வழங்கினார். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு செல்லும் ஒரே அதிமுக எம்பி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக வேட்பாளராக தங்கத்தமிழ்ச்செல்வனும் களமிறக்கப்பட்டனர். இரண்டு அனுபவம் வாய்ந்த தலைவர்களை ரவீந்திரநாத் குமார் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.