விஜயகாந்த் தனது முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் 

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்து மக்களுக்கு சேவை செய்யும் என்று கூறியிருந்தார்

அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்ததால் அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்பதையே இந்த அறிக்கை தெரிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் இந்த முடிவு குறித்து சற்றுமுன் செய்தியாளர்களிடம் கருத்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என்ற நிலையிலிருந்து விஜயகாந்த் மாறாமல் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளே கூட்டணிக்கு தயாராகி வரும் நிலையில் விஜயகாந்த் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

செக்கச் சிவந்த வானம்: டிரைலர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில்

'சர்கார்' இசை வெளியீட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தி குறித்து இன்று காலை ஏற்கனவே பார்த்தோம்

இன்னும் சில நிமிடங்களில் 'சர்கார்' குறித்த முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்.

செப்டம்பர் 5: நாள் குறித்த அழகிரி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டில் அக்கட்சி உள்ளது. வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள

மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கிய பாடகர்

கேரளாவை சேர்ந்த பிரபல பாடகர் உன்னிமேனன் தனது மகனின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.