ஓபிஎஸ்-ன் தாயாரிடம் ஆசிபெற்ற ஈபிஎஸ்...! நெகிழ்ச்சியான தருணம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்மையில் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தாரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரின் தாயார் பழனியம்மாள் நாச்சியாரிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளார்கள் சார்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் தொகுதியில் களமிறங்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளார் மற்றும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, முதல்வர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அச்சமயத்தில் ஓ.பி.எஸ்-ன் குடும்பத்தை சந்தித்த முதல்வர், அவரின் தாயார் பழனியம்மாள் நாச்சியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments