ஓபிஎஸ் தினகரனின் ஸ்லீப்பர் செல்லா? பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாகவும், முதல்வர் எடப்பாடியின் பழனிச்சாமியின் அரசை கவிழ்க்க அவர் திட்டமிட்டதாகவும் தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செலவன் நேற்று கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தகவலை ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள் மறுத்தனர். அதுமட்டுமின்றி அமைச்சர் தங்கமணி, 'தினகரன் தான் அம்முகவை அதிமுகவுடன் இணைக்க ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த தினகரன், 'கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓபிஎஸ் என்னை சந்தித்தது உண்மைதான். ஈபிஎஸ் அரசை கவிழ்க்க ஆதரவு தருவதாக கூறியது மட்டுமின்றி, என்னை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். நான் எனது ஆதரவாளர்களுடன் கலந்து முடிவு செய்வதாக கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
ஓபிஎஸ் என்னை சந்தித்து பேசியது உண்மை என்றாலும் அவர் எங்களுடைய ஸ்லீப்பர் செல் கிடையாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியுடன் இணைவதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை. ஓபிஎஸ் அவர்களின் இரட்டை நிலையை வெளிப்படுத்தவும், இனிமேலும் ஓபிஎஸ் தன்னிடம் தூது அனுப்பாமல் இருக்கவே இந்த விளக்கத்தை தருகிறேன்' என்று தினகரன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com