சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிடைத்தை நிரப்ப திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலில் களமிறங்கியுள்ளனர். கமல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். ரஜினி எந்த நேரத்திலும் குதிக்க தயாராக இருக்கின்றார்

இந்த நிலையில் இதுவரை எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோதிலும் அவர்களை கண்டுகொள்ளாத அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும், ரஜினி, கமல் வருகையை மட்டும் அச்சத்துடன் பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே மாறுபட்ட கருத்துக்களை கொண்ட இந்த இரண்டு கட்சிகளும் ரஜினி, கமலை விமர்சனம் செய்வதில் மட்டும் ஒன்றுகூடியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த  விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பேசியபோது, 'புதிதுபுதிதாக பலர் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். இதேபோல் சிலர் கருத்து கந்தசாமியாக உள்ளனர். அரசியல் பற்றி தெரியாத இவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது' என்று கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். பூஜ்யம் யாருக்கு கிடைக்க போகிறது என்பதை வரும் தேர்தலில் முடிவு செய்ய வேண்டியது தமிழக மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அப்பல்லோ பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 30ல் சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வரும் 'சீமராஜா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில்

இன்று ஸ்டாலின் தினம்

ரத யாத்திரை நடந்தபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்த்தார். அவருடைய எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த இந்து ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இந்து மக்களின் வாக்குகள் தேவையில்லை

ஸ்டாலின் பழமொழி: குசும்பர்கள் ஆன நெட்டிசன்கள்

கருணாநிதி பேசிய ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒரு பிழையும் இன்றி தெள்ளத்தெளிவாக பேசும் வழக்கத்தை உடையவர். அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர் பேசும் தமிழ் மொழியில் யாரும் குற்றம் காண முடியாது.