சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிடைத்தை நிரப்ப திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலில் களமிறங்கியுள்ளனர். கமல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். ரஜினி எந்த நேரத்திலும் குதிக்க தயாராக இருக்கின்றார்
இந்த நிலையில் இதுவரை எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோதிலும் அவர்களை கண்டுகொள்ளாத அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும், ரஜினி, கமல் வருகையை மட்டும் அச்சத்துடன் பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே மாறுபட்ட கருத்துக்களை கொண்ட இந்த இரண்டு கட்சிகளும் ரஜினி, கமலை விமர்சனம் செய்வதில் மட்டும் ஒன்றுகூடியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பேசியபோது, 'புதிதுபுதிதாக பலர் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். இதேபோல் சிலர் கருத்து கந்தசாமியாக உள்ளனர். அரசியல் பற்றி தெரியாத இவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது' என்று கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். பூஜ்யம் யாருக்கு கிடைக்க போகிறது என்பதை வரும் தேர்தலில் முடிவு செய்ய வேண்டியது தமிழக மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments