வரவேற்கப்படும் 11 . ஓடி ஒளியும் 122

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்றபோது பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆவடி தொகுதிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு அந்த தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். அதேபோல் மதுரை சோழவந்தான் தொகுதி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 எம்.எல்.ஏக்களும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்போதைக்கு அவர்களுடைய வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், 122 எம்.எல்.ஏக்கள் மீதான கோபம் மக்களுக்கு இன்னும் குறையவில்லை என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
ஜனநாயக நாட்டில் மக்கள் மட்டுமே மகத்தான சக்தி என்பதையும், மக்களின் குரலே மகேசன் குரல் என்பதை மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகளுக்கு புரிய வைக்க வேண்டிய சரியான நேரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ராகவா லாரன்ஸின் அன்புக்கோரிக்கை

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது.

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்து பார்த்து வருகிறோம் அல்லவா. அந்த வகையில் இந்த வார சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

விஜய்யின் எளிமையை பார்த்து வியந்த நியூசிலாந்து நடிகை

இலங்கையை பூர்வீகமாக கொண்டு நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இளம்பெண் சஜா என்பவர் தற்போது கோலிவுட்டில் நாயகியாகியுள்ளார் தமிழ்ப் பெண்ணான இவர் கோலிவுட் குறித்தும், விஜய்யின் எளிமை மற்றும் விஜய்சேதுபதியின் கடின உழைப்பு ஆகியவை குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

சென்னை பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து முதலிடத்தில் சூர்யாவின் 'சி3'

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்