ஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..! சோகத்தில் குடும்பம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் , சகோதரர் பாலமுருகன் இன்று காலமானார்.
பாலமுருகன் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சைபெற்று வந்தார். நேற்று வீடுதிரும்பிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
ஓபிஎஸ்- அவர்களுக்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என்ற மூன்று சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். அவரது அண்ணன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்-ன் 2-வது தம்பி உடல்நலக் குறைபாட்டால் இன்று காலமானார். பாலமுருகன் அவர்களின் உடல் இறுதி மரியாதைக்காக, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னயிலிருந்து பன்னீர் செல்வமும், தேனியிலிருந்து எம்.பி ரவிந்த்திரநாத்-ம் பெரியகுளம் சென்றுள்ளனர். கட்சித்தொண்டர்கள், உறவினர்கள், அதிமுகவினர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments