ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்? சசிகலா வாக்குமுலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலர் சசிகலா குடும்பத்தினர் மீது குற்றஞ்சாட்டினர். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் கூறியதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஓபிஎஸ் மற்றும் தம்பிதுரை பார்த்ததாகவும், மேலும் அப்போதைய பொறுப்பு ஆளுனர் வித்யாசகர்ராவ் அவர்களும் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை என்று அதிமுக தரப்பினர் கூறி வரும் நிலையில், ஜெயலலிதாவை ஓபிஎஸ் மற்றும் தம்பிதுரை பார்த்ததாக சசிகலா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments