கெடு முடிகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் அவசர ஆலோசனை
- IndiaGlitz, [Tuesday,August 01 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதிப்பதாகவும், அதற்குள் இணையாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் தினகரன் கொடுத்த 60 நாள் கெடு வரும் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் முக்கிய அமைச்சர்களும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்களும் தனித்தனியே அவசர ஆலோசனை செய்து வருகின்றனர்.
கெடு முடிந்த மறுநாள் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி தினகரன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளதால் அதற்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.