Oppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..?!

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

Oppo, find X2 pro மற்றும் find X2 சீரிஸ் மொபைல்களை அதிக விலை செக்மென்ட்டில் வெளியிட்டுள்ளது. ஹோல் பன்ச் கட் அவுட்டுடன் 120hz அல்ட்ரா விஷன் டிஸ்பிளேவுடன் களமிறங்கியுள்ளது. இது 10x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 60x டிஜிட்டல் ஜூம் கொண்டுள்ளது. விலை அடிப்படையில் பார்க்கும் போது இது சாம்சங் s20க்கு போட்டியாக வந்துள்ளது போல உள்ளது.

find X2 pro 12 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியன்ட் கிட்டத்தட்ட 1,199 யூரோ எனவும் find X2 12 ஜிபி 256 ஜிபி வேரியண்ட் 999 யூரோ எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் பார்த்தால் ரூ.1,67,300 மற்றும் ரூ. 83,400 என வருகிறது. இவ்வளவு அதிகமாக வரவில்லை என்றாலும் விலை சற்று குறைவாக வரவும் வாய்ப்பிருக்கிறது.

பின்பக்கம் மூன்று கேமரா 48,48,13 மெகாபிக்ஸல் என உள்ளது. 4260mAh பேட்டரியானது கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் வெளிப்புறம் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.