மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்… தமிழக முதல்வர் வேண்டுகோள்!!!

 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைக் குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இத்திருத்தச் சட்டத்தைக் குறித்து எதிர்மறையான கருத்துகளைக் கூற வேண்டாம் என்றும் மக்கள் மத்தியில் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும் இவை தமிழக விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டம் என்றும் இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 18 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில் இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும் உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும் விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில்

(அ) விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம், 2020

(ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020.

(இ) அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020.

ஆகிய சட்டங்கள் 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு கடந்த 15.9.2020 மற்றும் 17.9.2020 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டங்கள். எனவே இவற்றை அரசியலாக்க வேண்டாம் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

More News

எகிப்து சுடுகாட்டில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பெட்டிகள்? நூற்றாண்டுகளை கடந்து வாழும் நாகரிகம்!!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

வழக்கத்தைவிட 3 மணிநேரம் முன்னாடியே செல்லும் ரயில்கள்? பயணிகளை அசத்தும் பிற வசதிகள்…

வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை விட 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகளைக் கொண்டு செல்லும் புதியவகை ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலும் விஜய் டிவியில் பிரபலமானவர்கள் ஒருசிலர் போட்டியாளர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தென் இந்தியாவிலேயே முதல் பொறியியல் கல்லூரி… பல்கலைக் கழகமாக உயர்ந்த சுவாரசிய வரலாறு…

இந்திய அளவில் தொழில்நுட்பத் துறைக்கான ரேங்கிங் வரிசையில் முன்னிலை பெற்றிருக்கும் சென்னை அண்ணா பல்கலைகழகம் தற்போது நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் வின்னர்? புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்