ஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பசும்பாலில் அம்மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத் தலைவரே சர்க்கரைத் தண்ணீர் கலந்து அனுப்புவது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தான் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரித்த பாலை ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கும்போது கேன்களில் இருந்து பாலை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக சர்க்கரை கலந்த தண்ணீரை சேர்த்து விடுவதும் அந்த வீடியோவில் அம்பலமாகி இருக்கிறது. இதற்கு ஆவின் நிர்வாகத்தின் ஓட்டுநரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
அம்மாவட்டத்தின் சாவல்பூண்டி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால் தனது வீட்டில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து சங்கத்தின் செயலாளர் புஷ்பநாதன் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகிறார். இதில் உறுப்பினர்களாக 150 க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளையில் இருந்து நாள்தோறும் 500 முதல் 600 லிட்டர் பாலை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு பால் கேன்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநருடன் சேர்ந்துகொண்டு ஒவ்வொரு கேனிலும் 4 லிட்டர் அளவுக்கு பாலை எடுத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பாலுக்கு பதிலாக சர்க்கரைத் தண்ணீரை கலந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படி நாள்தோறும் 80 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை பாலை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout