கவுதம் கார்த்திக்கின் 'முத்துராமலிங்கம்' ஓப்பனிங் எப்படி?

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ஐஸ்வர்யாதனுஷின் 'வை ராஜா வை' உள்பட ஒருசில படங்களில் நடித்த கவுதம் கார்த்திக் நடித்த 'முத்துராமலிங்கம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் இந்த படம் 12 திரையரங்குகளில் 72 காட்சிகள் திரையிரப்பட்டு ரூ.12,13,760 வசூல் செய்து சராசரி படம் என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்ததால் ஆவரேஜ் ஓப்பனிங் வசூல் படமாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

அதேபோல் இதே நாளில் வெளியான இன்னொரு படமான கனவு வாரியம் திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 11 திரையரங்க வளாகங்களில் 39 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,71,180 வசூல் செய்துள்ளது. பெரிய ஸ்டார் இல்லாத நிலையிலும் இந்த படத்திற்கு 65% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.