ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 29 வயது பெண் செய்த திடுக்கிடும் மோசடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி செய்த 29 வயது பெண் குறித்த திடுக்கிடும் மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
ஊட்டியை சேர்ந்த 29 வயது பெண் ரூபிணி என்பவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். ஆனால் நேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அவர், மக்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடியான திட்டத்தை கொண்டு வந்தார் தான் ஒரு டிரஸ்ட் வைத்திருப்பதாகவும், அந்த டிரஸ்ட்டில் மூலம் கல்யாணம் மற்றும் வீடு கட்டுவதற்கு கடன் கொடுப்பதாகவும், அந்த கடனை பெற முன் பணமாக சில ஆயிரங்கள் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் அவர் விளம்பரம் செய்துள்ளார்
அவருடைய இனிமையான பேச்சை நம்பி பலர் 25 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை முன்பணமாக அவரிடம் கட்டியுள்ளனர். இதனையடுத்து சுமார் 20 லட்ச ரூபாய் வரை ரூபிணி பண வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் முன் பணம் கட்டிய பொதுமக்கள் கடன் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்து அதன்பின் ரூபிணியே நெருக்க ஆரம்பித்தனர். கட்டிய முன்பணத்தையாவது திருப்பி தந்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் தள்ளப்பட்டனர்
இதுகுறித்து போலீசில் புகார் செய்த நிலையில் போலீசார் விசாரணை செய்தபோது ரூபினி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அவர் வைத்துள்ள ட்ரஸ்ட் போலியானது என்றும் இதே போல் பல ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர் பல்வேறு ஊர்களில் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது
இதனை அடுத்து ரூபிணியை போலீசார் கைது செய்தனர். ரூபிணி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் போலீஸ் அலுவலகம் முன்பு பணம் கட்டியவர்கள் குவிந்து அவரிடம் இருந்து தங்களுடைய பணத்தை பெற்றுத் தர கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுங்கள் என்று போலீசார் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரூபிணி தற்போது ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout