தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
- IndiaGlitz, [Monday,August 03 2020]
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக அரசு இதுகுறித்து தனது கொள்கை முடிவை தெரிவித்துள்ளது. சற்றுமுன் இதுகுறித்து கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்றும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்
மேலும் மும்மொழிக்கொள்கை என்பது மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு எதிராக கொள்கை என்றும், அந்த கொள்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
மேலும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் இருப்பினும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பும் இருமொழி கொள்கையில் ஒத்த கருத்தில் இருப்பதால் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது